உடல்மொழிக் களஞ்சியம்-அத்தியாயம்-2 மனிதன் எனும் விலங்கு--அவ்விலங்கின் தனிப்பட்ட எல்லைகளும் பிரதேசங்களும்.
உடல்மொழிக் களஞ்சியம் அத்தியாயம்-2 மனிதன் எனும் விலங்கு-- அவ்விலங்கின் தனிப்பட்ட எல்லைகளும் பிரதேசங்களும். யூரிலோகஸ் அறைக்குள்ளே இருந்த மாலுமிகள் யாவரும் வெவ்வேறு வகையான மிருகமாக மாறிவிட்டதைப்போல் உணர்ந்தான். உட்கொண்டிருந்த மதுவின் தாக்கம் சகல கட்டுப்பாடுகளையும் நீக்கி விட்டிருக்க ஒவ்வொரு ஆணின் தன்மைக்கேற்ப அங்கே ஒவ்வொரு வகையான மிருகம் தோன்றியது. ஒரு மாலுமி சர்ஸியின் மென்மையான தேகத்தை தொட்டதும், துடிக்கின்ற இரையை கரடுமுரடாக பற்றியிழுத்து,வான்பார்த்து ஊளையிடும் ஓநாயாக தோற்றமளித்தான். மற்றொருவன் பசுமீது பளுவுடன் பாயும் காளையாக மாறிவிட்டான். இன்னொருவன் சேற்றில் புரளும் முள்ளம்பன்றியாக காட்சியளித்தான். இவற்றோடு நீள்கொம்பு ஆடு, செம்மறியாடு, கீரிச்சிடும் குரங்கு, மான், கலப்பின நாய் இவை யாவற்றையும் அவன் ஒரே இடத்தில் கண்டான். --ஹோமரின் பள்ளியறை ஓடிஸி. தெரு நாய்களை பார்த்திருப்பீர்கள். அது அவ்வபோது தானிருக்கும் தெருவின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரைக்கும் ஓடும். இடையிடையே வண்டிகள் தெரு கம்பங்களை மோப்பம் பிடிக்கும்...