முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உடல்மொழிக் களஞ்சியம் அத்தியாயம்-3 தொடர்ச்சி.

 உடல்மொழிக் களஞ்சியம் அத்தியாயம் 3 தொடர்ச்சி. கைக்குலுக்குதலும் கையெடுத்துக் கும்பிடுதலும். ஆளுமைப்படுத்துவது, ஆளுகைக்கு கீழ்படிவது மற்றும் சரிசமமாக கைக்குலுக்குவது என்ற பொதுவான நிலைகளை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மேற்கண்ட படத்தில் காணப்படும் பெண் ஆளுகைக்கு கீழ்படிவது என்ற நிலையில் அந்த நாயோடு கைக்குலுக்கின்றார் என்றால், அந்த நாய்க்கு தன் கையென்ற காலை திருப்ப முடியாது என்ற நிலையே காரணம்! பொதுவாக புகைப்படங்களில் பார்ப்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாதீர்கள், அவை அந்தந்த கணத்திற்கு நிகழுபவை!!!                                            மூன்றுவிதமான                                                     கைக்குலுக்குகள் இப்போது இந்த மூன்றுவித கைக்குலுக்குகளை பற்றி பார்ப்போம். சிலர் கைக்குலுக்கும் போது உள்ளங்கையை கீழ்புறமாக திருப்பி வைத்துக்கொண்டு க...
சமீபத்திய இடுகைகள்

உடல்மொழிக் களஞ்சியம் 3

அத்தியாயம்-3 கையெடுத்துக் கும்பிடுதல், கைக்குலுக்குதல், மற்றும் உள்ளங்கை சைகைகள்.  சின்ன வயதில் அடிக்கடி கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு சிறுவயது நண்பர்கள் அடர்ந்த காட்டுவழியே பயணம் செய்துக்கொண்டிருந்த போது, எதிரே ஒரு கரடி வருவதை பார்த்து உடல்நடுங்கி நின்றனர். இருவரில் ஒருவனுக்கு மரம் ஏறத்தெரியும். அதனால் சட்டென்று அருகிலிருந்த அடர்ந்த மரத்திலேறி தப்பித்துக்கொள்கிறான். அடுத்தவன் என்ன செய்வது என்று முழித்தபோது, “அசையாமல் மல்லாந்து படுத்திருந்து, மூச்சுக்கூட விடாமல் இருந்தால், செத்துப்போய் விட்டான் போலுள்ளது, என நினைத்து கரடி போய்விடும்”, என்று யாரோ சொன்னது ஞாபகத்திற்குவர, அதேபோல் செய்கிறான். கரடியும் அவன் அருகே வந்து, குனிந்து சற்று மோந்து பார்த்துவிட்டு, பேசாமல் சென்று விடுகிறது. மரத்தில் இருந்தவன் கீழே இறங்கிவந்து, “கரடி உன்னிடம் ஏதோ சொன்னதே, என்னது அது?”, என்று கேட்கிறான். “ஆபத்துக்காலத்தில் உதவாதவனை நண்பனாக கொள்ளாதே என கரடி சொன்னது”, என இவனும் பதில் கூறுகிறான்.  நாய்கள், பூனைகள், புலிகள் என எல்லா விலங்குகளும் தமக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றன. சண்டைக்கு உயிர்,உ...

உடல்மொழிக் களஞ்சியம்-அத்தியாயம்-2 மனிதன் எனும் விலங்கு--அவ்விலங்கின் தனிப்பட்ட எல்லைகளும் பிரதேசங்களும்.

  உடல்மொழிக் களஞ்சியம்       அத்தியாயம்-2   மனிதன் எனும் விலங்கு-- அவ்விலங்கின் தனிப்பட்ட எல்லைகளும் பிரதேசங்களும்.     யூரிலோகஸ் அறைக்குள்ளே இருந்த மாலுமிகள் யாவரும் வெவ்வேறு வகையான மிருகமாக மாறிவிட்டதைப்போல் உணர்ந்தான். உட்கொண்டிருந்த மதுவின் தாக்கம் சகல கட்டுப்பாடுகளையும் நீக்கி விட்டிருக்க ஒவ்வொரு ஆணின் தன்மைக்கேற்ப அங்கே ஒவ்வொரு வகையான மிருகம் தோன்றியது. ஒரு மாலுமி சர்ஸியின் மென்மையான தேகத்தை தொட்டதும், துடிக்கின்ற இரையை கரடுமுரடாக பற்றியிழுத்து,வான்பார்த்து ஊளையிடும் ஓநாயாக தோற்றமளித்தான். மற்றொருவன் பசுமீது பளுவுடன் பாயும் காளையாக மாறிவிட்டான். இன்னொருவன் சேற்றில் புரளும் முள்ளம்பன்றியாக காட்சியளித்தான். இவற்றோடு நீள்கொம்பு ஆடு, செம்மறியாடு, கீரிச்சிடும் குரங்கு, மான், கலப்பின நாய் இவை யாவற்றையும் அவன் ஒரே இடத்தில் கண்டான். --ஹோமரின் பள்ளியறை ஓடிஸி.     தெரு நாய்களை பார்த்திருப்பீர்கள். அது அவ்வபோது தானிருக்கும் தெருவின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரைக்கும் ஓடும். இடையிடையே வண்டிகள் தெரு கம்பங்களை மோப்பம் பிடிக்கும்...

உடல்மொழிக் களஞ்சியம். அத்தியாயம்.1

 உடல்மொழி அத்தியாயம்-1 ஒரு சுருக்கமான விளக்கம்.   உடல்மொழி அல்லது உடலசைவு மொழி என்பது, ஒரு மனிதனாவன் அவன் வாழ்கின்ற சூழல், இடம், பண்பாடு, கல்வி, குணம், மனோபாவத்திற்கு ஏற்ப, பேச்சு மொழியின் ஏற்ற இறக்கம், தொனி, முக உணர்ச்சிகள், கைகால் அசைவுகள் மூலம் தன் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுவது ஆகும். இவ்விடத்தில் பண்பாடு, நாகரிகம் என்பதெல்லாம் அவன் காலங்காலமாக வாழ நேர்கின்ற பிரதேசத்தின் சூழலுக்கேற்ப இயற்கையாக இயல்பாக உண்டாகும் பழக்கவழக்கங்களும், அப்பழக்க வழக்கங்களை சடங்குத்தனமாக இறுக்கி அவற்றின் மீது பூசப்படும் புனிதங்களும் ஆகும்.  உதாரணமாக சென்னை நகர கடற்கரை மீனவனை கவனிப்போம்.அவன் வழிவழியாக கட்டுமரம் [இப்போது மோட்டார் படகு] படகினில் சென்று மீன் பிடிக்கிறான். அச்சமயத்தில் பரந்து விரிந்த கடற்பரப்பில் சக மீனவனோடு தொடர்பு கொள்ள முயலும் போது அவன் பயன்படுத்தும் வார்த்தைகள் சொற்பமே; அவற்றையும் அடிக்கின்ற காற்றின் வேகத்திற்கு ஏற்ப, நீட்டி இழுத்து, பேச்சு மொழியால் எழுத முடியாத எண்ணற்ற ஒலிகளையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதோடு தொடர்பு சாதனமாக பயன்படுவது உடல்மொழி மட்டுமே; அதுவும் வேக...

உடல்மொழிக் களஞ்சியம் BODY LANGUAGE.

உடல்மொழிக்களஞ்சியம்   பெரு.முருகன் .    முன்னுரையாக சின்னதொரு உரை.    ஒவ்வொரு நொடியும் ஏதோவொரு விஷயத்தை உணர்த்துகின்றன,அந்த ஒவ்வொரு விஷயமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.உங்கள் உடலானது ஒவ்வொரு கணத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.உடலின் அந்த மொழியை நீங்கள் அறியமாட்டீர்கள்,அதாவது மனித உடலுக்கென்று சொந்தமாக மொழி ஒன்று உள்ளது,அது மனதிலிருக்கும் எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக காண்பித்துவிடும்,அதை உங்களால் ஏமாற்றி மறைக்கவே முடியாது.வாய்மொழியில் எப்படியாப்பட்ட ஜாலத்தை வேண்டுமானலும் காட்டலாம்,ஆனால் உடல்மொழியை பொறுத்தவரை அதற்குண்டான சாத்தியக்கூறே கிடையாது. -ஓஷோ   உடல்மொழியின் அர்த்தங்களை சரியாக விளங்கிக்கொள்வதென்பது மாபெரும் வரம். ஆனால் அந்த வரத்திற்க்குள்ளே ஒரு சாபம் பொதிந்துள்ளது,இத்தனைநாள் அன்பாக ஆசையாக உண்மையாக இருந்த நபர்களெல்லாம்,நிஜத்தில் அதுபோல் நடித்துக் கொண்டிருந்தனர்,என்பதை அறியவரும்போது,உங்கள் மனதை நார்நாரக கிழித்து எறியுமே ஓர் வேதனை,அதுதான் அந்த சாபம்.எனினும் அந்த சாபம் தரும் வேதனைகளை நீங்கள் தாங்கிக்கொண்டால் உதாசீனப்படுத்தினால்,வேறுசில வர...