உடல்மொழிக் களஞ்சியம் அத்தியாயம் 3 தொடர்ச்சி. கைக்குலுக்குதலும் கையெடுத்துக் கும்பிடுதலும். ஆளுமைப்படுத்துவது, ஆளுகைக்கு கீழ்படிவது மற்றும் சரிசமமாக கைக்குலுக்குவது என்ற பொதுவான நிலைகளை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மேற்கண்ட படத்தில் காணப்படும் பெண் ஆளுகைக்கு கீழ்படிவது என்ற நிலையில் அந்த நாயோடு கைக்குலுக்கின்றார் என்றால், அந்த நாய்க்கு தன் கையென்ற காலை திருப்ப முடியாது என்ற நிலையே காரணம்! பொதுவாக புகைப்படங்களில் பார்ப்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாதீர்கள், அவை அந்தந்த கணத்திற்கு நிகழுபவை!!! மூன்றுவிதமான கைக்குலுக்குகள் இப்போது இந்த மூன்றுவித கைக்குலுக்குகளை பற்றி பார்ப்போம். சிலர் கைக்குலுக்கும் போது உள்ளங்கையை கீழ்புறமாக திருப்பி வைத்துக்கொண்டு க...