உடல்மொழிக் களஞ்சியம்
அத்தியாயம் 3 தொடர்ச்சி.
கைக்குலுக்குதலும் கையெடுத்துக் கும்பிடுதலும்.
மூன்றுவிதமான கைக்குலுக்குகள்
இப்போது இந்த மூன்றுவித கைக்குலுக்குகளை பற்றி பார்ப்போம். சிலர் கைக்குலுக்கும் போது உள்ளங்கையை கீழ்புறமாக திருப்பி வைத்துக்கொண்டு கைக்குலுக்குவார். இவர் ஆதிக்க மனப்பான்மை செலுத்துகின்றார் என்று பொருள், அதேபோல் கையை குலுக்கும்போதே உள்ளங்கையை மேற்புறமாக வைத்து ஒருவர் குலுக்கின்றார் என்றால் அவர் தாழ்வுமனப்பான்மையால் தவித்து, ஆளுமையை ஒப்புக்கொள்கின்றார் என்று பொருள், ஆக சகமனிதர்கள் இருவருமே மனதளவில் சமமாக இருந்தால் அவர்கள் படத்தில் மூன்றாவது நிலையை போல் கைக்குலுக்குவர்.
பிரபலங்களின் சில கைக்குலுக்குகள்.
இந்த படத்தில் தெரியும் கைக்குலுக்களை பாருங்கள்! இருவரும் சம நிலையில் இருப்பதை குறிக்கின்றது. நண்பர்கள், சமமாக உள்ள பகைவர்கள், அரசியல்வாதிகள் யாவருமே தம்மையறியாமலே இந்த நிலையில் வைத்தே கைக்குலுக்குவார். [ஆனால் சமூக ஊடகத்தளங்கள் பரவலாக பயன்படுத்தபட்டு வரும் நிலையில், அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் பலரும், இந்த உடல்மொழியில் கரைகண்ட சிலரை கூடவே வைத்திருப்பார்கள். அவர்கள் யார் யாரிடமும் எப்படி நடந்துக்கொள்வது என அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருப்பார் ]
இப்புகைப்படத்தை கூர்ந்து பாருங்கள். இருவருமே சரிக்கு சரியாக சமமாக நின்றே கைக்குலுக்குகின்றனர். ஒருவர் அமெரிக்க அதிபர் டிரம்ப், மற்றொருவர் வடகொரிய அதிபர் கிம். கைக்குலுக்கும் அச்சமயத்தில் இருவருமே உலகின் சூப்பர் மேன்!!! இருவரில் ஒருவர் தாழ்ந்திருந்தாலும் கைக்குலுக்கலின் நிலை மாறியிருக்கும்!!!
இப்போது அதே அமெரிக்க அதிபர் டிரம் அவர்களின் வேறொரு நபருக்கு அளிக்கும் மற்றொரு கைக்குலுக்கல் நிலையை கவனிப்போம். அவர் ஆளுமை கொண்ட அதிபராக கைக்குலுக்குகின்றார், ஆக ஒரேநபர் பல்வேறு நபர்களிடம் பல்வேறுவிதமாக கைக்குலுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்வோம்!!
ஆளுமை நிலையும் தாழ்வு நிலையும்.
இவைதவிர்த்து, கைமுட்டியோடு கைமுட்டியை வைப்பது, தூரத்திலிருந்தே கைக்குலுக்குவது, தன் கையையே தானே பிடித்துக் குலுக்கிக்கொள்வது முதலானவையும் கைக்குலுக்குதல் சமாச்சாரத்தில் நிகழும் சைகைகள் ஆகும்.
கைக்குலுக்குதலில் மற்றொரு நிலையும் உண்டு, ஒரு கையை குலுக்கிக்கொண்டே மற்றொரு கையை அதன்மேலே வைப்பது. ஆனால் இந்த நிலை நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது நெருங்கிய உறவினர்களிடமோ தரப்பட வேண்டியது. மாறாக வேறு யாரிடமாவது இந்த நிலையை மேற்கொண்டால் அவருள் அவநம்பிக்கை விளைந்திட சாத்தியக்கூறுகள் அதிகம்!!!
சரி, நீங்கள் எதிராளியை சமமாக நினைந்தே கைக்குலுக்கின்றீர், ஆனால் அவரோ ஆளுமை படைத்தவராக தன்னை நினைத்துக்கொண்டு உங்களை தன்னுடைய ஆளுமை நிலைக்கு கொண்டுவர கைக்குலுக்கின்றார், அதாவது தன்னுடைய உள்ளங்கையை கீழ்புறமாக பார்த்தபடி! இதை எப்படி முறியடிப்பது?
எதிராளி ஆளுமை நிலையில் கைக்குலுக்க உங்களிடம் கையை நீட்டும் பொழுது, நீங்கள் அவன் கைக்கு மேற்புறமாக கையை கொண்டு சென்று அவனுடைய மணிக்கட்டை பிடித்துவிட வேண்டும்! அவ்வளவுதான்!!
மற்றொரு வழி ஒன்றுள்ளது. அதாவது எதிராளி விரும்புகின்றாற்போல், அவருக்கு இணங்கி கைகொடுத்து விட்டு சட்டென்று அவரை நெருங்கி வந்து கையை திருப்பி கொண்டால் சுலபமாக அவருடைய ஆளுமை நிலையிலிருந்து விலகலாம்.
அரசியல்வாதியின் கைக்குலுக்கல்கள்..
கைக்குலுக்குதல்களில் எண்ணற்ற நிலைகள் உண்டு! செத்த மீனை பிடிப்பது போன்ற உணர்வை தரக்கூடிய நிலையும் உண்டு. அதாவது ஒருநபர் கைக்குலுக்கின்றார் என்றால் அவரின் கையானது செத்துப்போன மீனை பிடிப்பது போன்றதொரு உணர்வை உங்களுக்கு தரக்கூடும்!! இவர் ஒருவேளை பலவீனத்தன்மை கொண்டவராக இருக்கக்கூடும்!
செத்த மீன் கைக்குலுக்கல்

மற்றும் கையை இரும்பு கரம் கொண்டு பிடிப்பது, பலவீனமாக கைக்குலுக்குவது, நுனிவிரல் கொண்டு கைக்குலுக்குவது முதலான கைக்குலுக்களை நீங்கள் அனுபவித்திருக்கக்கூடும். அப்படி இல்லையெனில் கூடியவிரைவில் அனுபவிப்பீர்களாகுக!!
நீங்கள் என்றாவது இதுபோன்று கைக்குலுக்களை அனுபவித்து இருப்பீர்கள். அதாவது நெருக்கமான, ஆறுதல் கூறும் தோழர் இதுபோன்ற அரவணைப்பை உங்களுக்கு தந்திருக்கலாம். ஒருகையால் உங்கள் கையை பற்றிக்கொண்டு, மறுகையை உங்கள் கையிலோ அல்லது தோளிலோ வைத்திருக்கலாம். அவரின் கையானது உங்கள் கையில் தொடங்கி தோள்வரைக்கும் எவ்வளவு உயரமாக போகின்றதோ அவ்வளவு அன்பை அரவணைப்பை ஆறுதலை அவர் உங்களுக்கு அளிக்கின்றார் என்று பொருள்.









கருத்துகள்
கருத்துரையிடுக